பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 135 'மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள் ஏனை வீர இலாடர் விதப்பர்கள் சீனர் தெங்கணர் செஞ்சகர் சோமகர் சோன கேசர் துருக்கர் குருக்களே' (47) ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர் சேதி ராசர் தெலுங்கர் கருங்டர் ஆதி வானம் கவித்த அவனிவாழ் சோதி நீள்முடி மன்னரும் துன்னினார் (48) கம்பர் கொடுத்திருக்கும் பட்டியலைப் பார்க்கும்போது நெடுந்தொலைவில் உள்ளவர்கள் கூட வந்திருக்கிறார்களே என்ற வியப்பு தோன்றுகிறது. இக்காலத்திலும், உலகநாடு களுள் ஏதாவது ஒன்றில் முடிசூட்டு விழாவோ இறுதிக் கடனோ இன்ன பிறவோ நடைபெறுங்கால் பலநாட்டுத் தலைவர்களும்-அமைச்சர்களும் கலந்து கொள்ளும் செய்தி ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. கோலம் காண் படலம் உலகின் அறியாமை : கண்களின் அழகை அடிக்கடி மறைக்கும் இமைகளைப் போல, சீதையின் உடலழகை மறைக்கும்படி அணிகலன் களைத் தோழியர் அணிவித்தனர். இச்செயல் அமிழ்தத் திற்குச் சுவை சேர்ப்பதுபோன்று அழகுக்கு அழகு செய்யும் அறியாமையாகும். இதை நோக்குங்கால் உலகம் ஏழைமை (அறியாமை) உடையதென்றே சொல்ல வேண்டும். 'அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல், உழிழ் சுடர்க் கண்கள் கங்கை உருவினை மறைப்பது ஓரார்