பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 163 மா, பலா என்னும் முக்கனிகள் உயர்ந்தனவாகக் கருதப் பட்டன. முக்கனியும் சோறும் அளித்தார்கள் என்று தமிழக மக்கள் கூறும் கனிகளைக் கம்பர் கோசல நாட்டிலும் உள்ளனவாக ஏற்றிக் கூறியுள்ளார். முக்கனி யின் முதன்மையை முந்து முக்கனி' என்னும் தொடர் அறிவிக்கிறது. பயறு வகைகளும் உண்டாம். சமநிலை உணவுக்குப் பயறு வகைகளும் தேவை. இவற்றுள் முந்திரிப் பருப்பு வறுவலுக்கு முதலிடம் அளிப்பர் சிலர். குழம்பு கொஞ்சமாக ஊற்றப்படின், உண்பவர் பரிமாறுபவரை நோக்கி, என்னய்யா நெய் போடுவது போல் போடுகிறாய்-இன்னும் தாராளமாய்ப் போடு என்பது உண்டு.அதாவது, நெய் சிறிதளவே பரிமாறப்படும். ஆனால், இங்கோ, உணவுப் பொருள் மறையும் (முழுகும்) அளவு நெய் ஊற்றப்படுமாம். இதனை முழுத்த நெய்யின்’ என்னும் தொடர் அறிவிக்கிறது. தயிர் கட்டி-கட்டியாகப் பரிமாறப்படுகிறதாம். சில இடங்களில் மோரில் நீர் கலப்பதற்குப் பதிலாக, நீரில் மோர் கலப்ப துண்டு. இதனை நீர் மோர் என்று கூறாமல், மோர் நீர்' என்றே கூற வேண்டும். ஈண்டு, காளமேகப் புலவரின் நகைச்சுவைப் பாடல் ஒன்று நினைவைத் தூண்டுகிறது. ஆய்ச்சி ஒருத்தி விற்ற மோர் மிகவும் தண்ணிரா யிருந்ததாகப் புலவர் கிண்டல் செய்கிறார். இந்த மோர், விண்ணில் இருந்தபோது கார்(மேகம்) என்று பெயர் பெற்றதாம்; நிலத்திற்கு வந்த பின் நீர் என்னும் பெயர் பெற்றதாம். இந்த ஆய்ச்சி கையில் அகப்பட்ட பின்னர் மோர் என்னும் பெயர் பெற்றதாம். அதாவது, கார், நீர், மோர் என்னும் முப்பேரும் பெற்றதாம். பாடல்: 'காரென்று பேர்பெற்றாய் ககனத்தில் உறும்போது, நீரென்று பேர்பெற்றாய் நீள்கிலத்தில் வந்ததற்பின்,