பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைம் பொழில் 169 வீந்தவர் என்பவர்; வீந்தவ ரேனும் ஈந்தவர் அல்லது இருந்தவர்'யாரே' (20) இந்தப் பாடலில், புகழ் என்னும் ஆக்கத்தை அளிப்பதான பொருள் இழப்பும், இறப்பினும் புகழுடம் பொடு வாழ்வதாகவே மதிக்கத்தக்க சாவும், திறனுடை யோர்க்கு அன்றி மற்றவர்க்குக் கிடைப்பது அரிது-என்னும் கருத்து மிளிரும். நேத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது’’’ (235) என்னும் குறள் மணம் வீசுகிறது. புறநானூற்றில் உள்ள

  • மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் கிறீஇத் தாம் மாய்ந்தனரே” (165-1,2) என்னும் பாடல் பகுதியும் ஈண்டு எண்ணத்தக்கது. மேலும் மாவலி கூறுகிறான்: தீமை செய்யும் பகைவரைவிட,கொடுப்பதைத் தடுக்கும் கொடியவரே ஒருவர்க்குப் பெரிய பகைவராவர். அவர்கள் தங்களையும் அழித்துக் கொள்வர். இதனினும் தீய கேடு வேறில்லை. எமது ஆசான் வெள்ளியே! ஒருவர்க்கு ஒருவர் கொடுப்பதைத் தடுப்பது உமக்கு அழகு இல்லை. கொடுப்பதைத் தடுக்கும் கொடியவர், தாமும் தம் சுற்றமும் உடுப்பதும் உண்பதும் இன்றி அழிவர்: 'அடுப்ப வரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர் கொடுப்பவர் முன்பு கொடேல் என கின்று தடுப்பவரே பகை, தம்மையும் அன்னார் கெடுப்பவர், இன்னதோர் கேடிலை என்றான்' (21)

  • எடுத்து ஒருவருக் கொருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோ தகவில் வெள்ளி கொடுப்பது விலக்கு கொடியோர் தமது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி ஒழியுங் காண்' (22)