பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பால காண்டப் விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம் மண்ணுளே இழிந்ததென்ன வந்து போன மைந்தனார் எண்ணுளே இருந்தபோதும் யாவரென்று தேர்கிலேன் கண்ணுளே இருந்தபோதும் என்கொல் காண்கிலாதவே (53) இராமன் அரச குமாரன் ஆதலால் மார்பில் உள்ள பூணு ல் பொன்னால் ஆக்கப்பட்டது. அது, மின்னல் போல் ஒளி வீசுகிறதாம். உலகியலில் பொன்பூணுால் அணிந்து கொள்ளாவிடினும், திருமணத்தின்போது, செல்வக் குடும்பத்தினர் சிலர் பொன் நூல் அணிவதுண்டு. பூணுல் அணியும் வகுப்பினரல்லாதவர் வீட்டுத் திருமணத் திலும், மணமகனின் உடன் பிறந்தாளாவது வேறு யாராவது மணமகனுக்குப் பொன்பூணுரல் அணிவிப்பது (சில இடங்களில்) உண்டு. மைந்தனார் என்பது மகன் என்ற பொருளில் இல்லை. மைந்து என்றால் வலிமை. மைந்தனார் என்றால், வலிமை மிக்கவர் என்பது பொருள். தந்தையினும் மகன் வலிமை யுடையவனாதலின் மைந்தன் எனப்படுகிறான். உணவு வீட்டில் இருந்தும், உண்ணமுடியவில்லையே என்பதுபோல, அவர் கண்ணுள்ளேயிருந்தும் காணமுடிய வில்லையே என்பது நயமான பகுதி. உலகியலில்கூட, "அவர் என் கண்ணிலேயே இருக்கிறார் - எப்போது, காண்பேனோ? என்று கூறுவதுண்டு. உண்டாட்டுப் படலம் முறுவலும் கண்ணிரும்: அயோத்தியிலிருந்து மிதிலை செல்பவர்கள் வழியில் பல விதமாகப் பொழுது போக்கினர். ஒருவன், தன் மனைவியி னும் இளையவளும் தன்னால் விரும்பப்பட்டவளுமாகிய