பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 181 இன்னொருத்தியின் பெயரால் மறதியாகத் தன் மனைவியை அழைத்து விட்டான். இதைக் கேட்டதும், அவன் மனைவி, மறதியால் களவு வெளிப்பட்டதை எண்ணி முறுவல் செய்தாள். அதேநேரத்தில், கணவன் மற்றொருத்தி மேல் காதல் கொண்டிருப்பதை எண்ணிக் கள கள’ எனக் கண்ணிர் உகுத்தாள்: 'வளைபயில் முன் கை ஓர் மயில் அனாள் தனக்கு இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும், முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே' (29) ஒரே நேரத்தில் பல் சிரிப்பதும், கண் நீர் சிந்துவதும் வியப்பும் நயப்பும் உள்ள செய்தியல்லவா? இங்கே, நான் அமுதுகொண்டே சி ரி க் கி ன் ேற, ன் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்’ என்னும் திரையோவியப் (சினிமாப்) பாடல் நினைவுக்கு வருகிறது கம்பரது பாடலில் உள்ளது போன்ற அமைப்பு இந்தப் பாடலிலும் உள்ளதால் இந்தத் திரை யோவியப் பாடலைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை. (சினிமாப் பாட்டை எடுத்துக் காட்டுகிறான் என்று என்னை யாரும் குறைவாக எண்ணக் கூடாது.) மெலிவும் வீங்கலும்: மனைவியைப் பிரிந்து போய்ப் பகைவரை வென்று வந்த மறவன் ஒருவன் மிதிலை செல்லும் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டான். அவன் மனைவியையும் கூட்டத்தில் கண்டான். மனைவியின் கொங்கைகள் (மார்பகங்கள்) இளைத்திருப்பதை அறி ந் த து ம், அவனுடைய தோள்கள் மகிழ்ச்சியால் பருத்தனவாம்: "பொலிந்த வாள் முகத்தினாள் பொங்கித் தன்னையும் மலிந்த பேர் உவகையால், மாற்று வேந்தரை பா-12