பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பால காண்டப் நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் மெலிந்தவா நோக்கித் தன் புயங்கள் வீங்கினான்' (37) மனைவியின் உடல் உறுப்புகள் மெலிந்திருப்பதை அறிந்து அவன் வருந்த அல்லவா வேண்டும்? மாறாக மகிழ்ச்சியடைந்திருக்கிறான்-அம்மகிழ்ச்சியால் அவன் தோள்கள் பருத்தன. இதில் என்ன நயம் உள்ளது? கணவன் பிரிந்திருந்தபோது, அவன் பால் உண்மை யான காதல் உடைய மனைவியின் உடல் உறுப்புகள் சோர்ந்து போய்விடும். இது அவளது உண்மைக் காதலின் அறிகுறி. எனவே, அவன் தன் மனைவியின் உறுப்பு சோர்ந்திருப்பதைக் கண்டு, அவளுக்குத் தன்பால் உள்ள காதல் மிகுதியை எண்ணி மகிழ்ந்தானாம். அதனால் அவன் தோள்கள் பருத்திட வீறு நடை போடுகிறான். இங்கே,

புகழ் புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார் முன்

ஏறுபோல் பீடு நடை' (59) என்னும் குறளின் அடிப்படைக் கருத்து ஓரளவு ஒப்பு நோக்கத் தக்கது. கம்பர் பாடலில் நயம் கொழிக் கிறது. உலாவியல் படலம் கண்ணன்: இராமனாக வந்து பிறந்துள்ள திருமாலுக்குக் கண்ணன் என்னும் பெயர் உண்டு அப்பெயருக்கு ஏற்ப. தெருவிலே சென்றபோது, தன்னைப் பார்த்த பெண்களின் கண்களில் இராமன் புகுந்து விட்டானாம். விதிவாய்ச் செல்கின்றான் போல் விழித்து . இமையாது கின்ற மாதர் கண்களுடே வாவும் மான்தேரில் செல்வான்