பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பால காண்டம் பரந்து செறிந்த பாரமானது கூந்தல் என்பதையும், கன முலை என்பது முலைகளின் பருமனையும், கலைசூழ் அல்குல் என்பது, மேகலை அல்லது உடை சூழ்ந்த அல்குல் என்பதையும் குறிக்கின்றன. இந்த அமைப்பால் நீக்கிடம் இல்லை. நீக்கிடம் என்றால், விலகித் தெரியும் வெற்றிடம் (காலி இடம்) என்பதாகும். இதனால் பின்னால் நின்ற பெண், எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்னும் அவா தூண்டியதால், முன்னால் நின்றிருப்பவர்களின் ஒடுங்கிய இடுப்பின் இடைவெளி வழியே பார்த்தாளாம். என்னும் கருத்து நயத்திற்கு உரியதன்றோ! இடை உள்ளதோ-இல்லையோ என ஐயப்படுவதாகச் சொல்லுதல் இலக்கிய மரபு. சிவப்பிரகாசர் தமது பிரபு லிங்கலீலை-மாயை பூசை கதி என்னும் பகுதியில் 'மருங்குல் என்னும் வெளி’ என இடையை வெற்று வெளி யிடமாகவே (55) கூறியுள்ளார். எனவேதான், இவளால் இடை வழியாய்ப் பார்க்க முடிந்தது, மன்மதனின் சோர்வு இராமனைக் காணும் மங்கையர் பலர். இராமனது அழகோ மிகுதி. காமம் விளைக்கும் மன்மதன் பலர் மீதும் தொடர்ந்து எய்ததால் அம்புகள் தீர்ந்து விட்டன. அதனால் காமம் வளர்க்கும் போரைத் தொடர உடைவாளை உருவக் கைவைத்தான். வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர் ஐயன் பொற்புக்கு அளவிலை ஆதலால் எய்யும் பொன்சிலை மாரனும் என் செய்வான் கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான்' (32) புராணக் கதைகளில் உள்ளவாறு மன்மதனது ஆட்சி விவரம் வருமாறு:- இவனுக்கு வில் கரும்பு-வண்டு நாண் கயிறு -அம்புகள் தாமரை, அசோகு, மாம்பூ, முல்லை, நீலம் ஆகிய மலர்கள்-மங்கையர் படை மறவர்