பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 221 கடவுளை வணங்கா விடினும், ஊடலின்போது மனைவியை வணங்குவது உண்டு என்பதற்கு ஒரு சான்று: திருமாலை வணங்கும்படி இரணியனிடம் வற்புறுத்திய போது, நான் வணங்குதல் என்பது மனைவியோடு ஊடல் கொண்ட நாளிலும் இல்லை எனக் கூறி அண்டங்கள் நடுங்கும்படி ஏளனச் சிரிப்பு சிரித்தானாம்: இதைக் கம்பரின், 'வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் இலதே என்னா அண்டங்கள் நடுங்க நக்கான்' என்னும் பாடல் பகுதியால் அறியலாம். இந்தப் பெரிய கற்பனையைக் கம்பர் மரக்கொம்புகளின் அமைப்புக்கு ஒப்புமையாக்கி நயக்கச் செய்துள்ளார். நீர் விளையாட்டுப் படலம் பொய்கையும் கொழுநரும் : மங்கையர் பொய்கையில் நீராடும்போதும் சரிகணவருடன் உடலுறவு கொள்ளும் போதும் சரி-சிவந்த வாய் உதடு வெளுக்கும்; கண் சிவக்கும்; உடம்பில் உள்ள சந்தனப் பூச்சு அழியும்; உடை நெகிழும். எனவே, இந்த வகையில், பொய்கையில் நீராடிய பெண்கட்குப் பொய்கை கணவர் போன்ற தாயிற்றாம்: செய்ய வாய் வெளுப்பக்கண் சிவப்புற, மெய்யராகம் அழியத் துகில் நெக தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் பொய்கை காதல் கொழுநரும் போன்றதே' (19) காதலி காதலனுடன் களவொழுக்கம் கொண்டதால் மேற்கூறிய அறிகுறிகள் தோன்ற, தோழியோ செவிலியோ அவளை நோக்கி இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்று கேட்க, பொய்கை ஆடினேன் ஆதலால் இந்நிலை ஏற்பட்டது என்று அவள் கூறுவாள். புணர்ச்சிக்குப் பின்,