பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பால காண்டப் புறப்பொருளாகக் கருதப்படும். இருப்பினும்-அதாவது-கம்பர் படைப்பில் இராமன்-சீதை என்று பெயர் சுட்டப்பட்டிருப்பினும், இருவர் தொடர்பாகக் காதல் செய்தி கம்பரால் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வேண்டுமானால் நாம் இதை அகப்புறமாகக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். இருவரையும் தெய்வப் பிறவிகள் எனக் கம்பர் கூறியிருப்பினும், மிதிலையில் ஒருவரை ஒருவர் முதல் முதலாகக் கண்டதும் கொண்ட காதல் மயக்கத்தை, மக்கள் பிறவியினர் கொண்டது போல அளவு மீறிப் புனைந்துரைத்து விட்டார். இவர்கள் இருவரும் காதல் வேதனைப்படுவது ஒரு புறம் இருக்க,-உலா நூல்களில் தலைவன் ஒருவன் உலா வருவதைக் காணும் பெண்கள் காதல்-காம வயப்படுதல் போல், இராமனை மிதிலைத் தெருவில் கண்ட பெண்டிரும் காதல்-காம வயப்பட்டு வருந்தியதாகக் கம்பர் கூறியுள்ளார். இஃதும் ஒரு புறம் கிடக்க, - திருமணம் காண அயோத்தியிலிருந்து மிதிலைக்குப் புறப்பட்டுச் செல்லும் பொது மக்களுள் ஆடவரும் பெண்டிரும் வழியில் காதல் திருவிளையாடல்கள் பல புரிந்தமை பற்றிக் கம்பர் வெளுத்துக் கட்டிவிட்டார். ஏன் இவ்வாறு கூறுகிறேன் எனில், அவற்றுள் சில செய்திகளை எழுத எனக்கே கூச்சமாக இருந்ததால், அவற்றை எழுதாமல் விட்டு விட்டேன்-அதனால் என்க. காப்பியச் சுவை: கம்பர் ஏன் அந்த அளவுக்குக் காதல் - காமம் பற்றிக் கூறினார் எனின், காப்பியத்தில் மற்ற சுவைகள் போல் காதல்-காமச் சுவையும் ஒரளவு இருக்க வேண்டும் என்னும் மரபு பற்றியாகும். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இதற்கு இளங்கோவடிகளின் துணையையும் நாடுவோம்.