பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பால காண்டப் என்பன பாடல் பகுதிகள் பொல்லா வினையேன் புகழு மாறு ஒன்றறியேன்” என்பது அவையடக்கம். இறுதிப் பகுதி நூல் பயன் கூறுவது. மாணிக்கவாசகர் நூலுக்கு இட்ட பெயர் சிவ புராணம் என்பது, சிவபுராணம் தன்னை உரைப்பன் யான்' என்று கூறியிருப்பதிலிருந்து அறியவரும். ஆனால், நூலின் பெயராகிய சிவபுராணம் என்பது பாயிரப் பகுதி என அறியாமல் நூலிலுள்ள பல பகுதிகள் போல் இதுவும் முதலில் உள்ள ஒரு பகுதியாகும் எனப் பிற்காலத்தில் மாறி எண்ணப்பட்டது. அவ்வாறே அச்சிட்டும் ஒதியும் வரப்படுகிறது. உண்மையில், சிவ் புராணம்' என்பதே மாணிக்கவாசகர் நூலுக்கு இட்ட பெயராகும், இந்நூலின் வாசகத்தின் அருமை பெருமை கருதிப் பின்னர் இதற்குத் திருவாசகம் என்னும் பெயர் குட்டப்பட்டது. இதுகாறும் கூறியவற்றால், திருமூலரின் மூவாயிரம் தமிழ்' என்னும் நூற்பெயர் பின் திருமந்திரம் என வழங்கப்படுவது போலவும், சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் பின் பெரிய புராணம் என வழங்கப்படுவது போலவும், மாணிக்க வாசகரின் சிவபுராணம் பின்னர்த் திருவாசகம் என வழங்கப்படுதல் போலவும், கம்பரின் 'இராமாவதாரம்? என்னும் நூற்பெயர் பின்னர் "இராமாயணம்' என வழங்கப்படலாயிற்று-என்பது பெறப்படும். இனி, கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பற்றிய செய்தி காண்போம் : சடையப்ப வள்ளல் : நூல் எழுதிய இடம், சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே எனக் கம்பர் கூறியுள்ளார். வெண்ணெய் நல்லூர் என்பது, தென்னார்க்காடு மாவட்டத்தில் - திருக்கோவலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூரைக் குறிக்கும்; அந்த ஊரில்தான் சடையன் இருந்தார் எனச் சிலர் அடித்துக் கூறுகின்றனர்.