பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 23 ஆனால் சில இலக்கியச் சான்றுகளைப் பார்க்கும் போது இது பொருத்தமாகத் தெரியவில்லை. தஞ்சை மாவட்டத்தில் வெண்ணெய் நல்லூர்-புதுவை என்னும் பகுதிகள் இருந்தன. அந்த வட்டாரத்தில்தான் சங்கரன் என்பவரும், அவர் மகன் சிறப்புற்ற சடையன் (சடையப்ப வள்ளல்) என்பவரும், சடையனின் மகன் சேதிராயன் என்பவரும் வாழ்ந்ததாகத் தனிப் பாடல்கள் தெரிவிக்கின்றன. சடையனால் கப்பல் கப்பலாக நெல் பெற்ற இலங்கைத் தமிழ் மன்னன் பரராச சிங்கன்' என்பவன் நன்றியறியதலாகச் சடையனைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்று உள்ளது. அது வருமாறு : இரவு நண்பக லாகிலென் பகல் இருளறா இரவாகி லென் இரவி எண்திசை மாறிலென் கடல் ஏழும் ஏறிலென் வற்றிலென் மரபு தங்கிய முறைமை பேணிய மன்னர் போகிலென் ஆகிலென் வளமை இன்புறு சோழ மண்டல வாழ்க்கை காரண மாகவே கருது செம்பொனின் அம்பலத்திலொர் கடவுள் கின்று நடிக்குமே காவிரித் திருநதியிலே ஒரு கருணை மாமுகில் துயிலுமே தருஉயர்ந்திடு புதுவையம்பதி தங்கு மானிய சேகரன் சங்கரன்தரு சடையன் என்றொரு தரும தேவதை வாழவே' என்பது பாடல். இது பெருந்தொகை என்னும் தொகை நூலில் 1135 ஆம் பாடலாக உள்ளது. இந்தப் பாடலில் சங்கரனும் அவர் மகன் சடையனும் இடம் பெற்றுள்ளனர். இனிச் சடையன் மட்டும் இடம் பெற்றுள்ள இரண்டு தனிப் பாடல்களைக் காண்போம். "மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர் கைகழுவ நீர் போதுங் காவிரி-பொய்கழுவும் போர்வேல் சடையன் புதுவையான் இல்லத்தை யார்போற்ற வல்லார் அறிந்து'