பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 31. என் தவப்பேறு. இனி யான் செய்ய வேண்டியது யாது? என்று வினவினான். பின்னர் முனிவர், காட்டில் யான் செய்யும் வேள்வியை அரக்கர்கள் அழிக்காவண்ணம் காக்க இராமனத்ை துணைக்கு அனுப்புக என்று வேண்டினார்: முதலில் புகழ்ந்துரைக்கும் பாடல்கள் வருமாறு: கையடைப் படலம் 'என் அணைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடைய ரானால் பன்னகமும் நகுவெள்ளிப் பணிவரையும், பாற்கடலும், பதும பீடத்து அந்நகரும், கற்பக நாட்டுஅணி நகரும் மணிமாட அயோத்தி என்னும் பொன்நகரும் அல்லாது புகல் உண்டோ? இகல் கடந்த புலவு வேலோய்!' (8). "இன்தளிர்க் கற்பக நறுங்தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து கின்றளிக்கும் தனிக்குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி, குன்றளிக்கும் குலமணித் தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு அன்றளித்த அரசன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது, அரச! என்றான்' (9). இந்த உலகியல் நடைமுறையை விசுவாமித்திரரும் பின்பற்றியுள்ளார். இதை விசுவாமித்திரரின் பேச்சு நயம் என்பதா? விசுவாமித்திரர் இவ்வாறு கூறியதாகப் பாடியுள்ள கம்பரின் கவிநயம் என்று பாராட்டி மகிழ்வதா? (இந்தக். காலத்தில் இத்தகைய செயலை ஐஸ் (Ice) வைத்தல்' என்று வேடிக்கையாகச் சிலர் கூறுவது வழக்கம்),