பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 43 (மனை) முதலியவறறால் குறை ஏதும் இல்லையாம்; கொடுப்பவருக்குக் கொள்வோர் இல்லாத குறை ஒன்று தான் உள்ளதாம். பாடல் : "உடுப் போர்க்கு உடுக்கும் துகில்களால் உண்போர்க்கு உண்ணும் பொருள்களால் தொடுப்போர்க்கு எடுக்கும் மலர்களால் அணிவோர்க்கு அணியும் சுடரிழையால் அடுப்போர்க்கு அடுக்கும் மனைகளால் குறைபாடு உடையதன்று அதுதான் கொடுப்போர்க்கு இரப்போர் இல்லாத குறை ஒன்றுளது கூறுங்கால்’’ (16) இவ்வாறு கம்பரும் சிவப்பிரகாசரும் அறிவித்திருப்பது உண்மையா? இல்லை - உண்மை இல்லை- கற்பனைக் கருத்தே. கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்ததுகொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தது; ஈ என இரத்தல் இழிந்தது-ஈயேன் என்றல் அதனினும் இழிந்ததுஎன்றெல்லாம் தமிழ் இலக்கியங்கள் கூறத் தவறவில்லை. இதற்கு அமைதி யாது? உள்ளதை உள்ளவாறு-நடந்ததை நடந்தவாறு கூறுவது வரலாறு. இருப்பதைக் கொண்டு இருக்க வேண்டியதையும், நடந்ததைக் கொண்டு நடக்க வேண்டியதையும் பரிந்துரைப்பது இலக்கியம். எனவே தான், பிறரிடம் கையேந்தும்படி நாட்டில் வறுமை, பகை, பொய், அறியாமை முதலியன இருத்தல் கூடாது; வளமை யும் அமைதியும், உண்மையும் கல்வி கேள்வியறிவும் இருத்தல் வேண்டும் - என்பதை அறிவுறுத்தவே - வற்புறுத்தவே இவ்வாறு புதுமைச் சுவையுடன் கருத்து கூறியுள்ளனர் கம்பர் முதலானோர். பல கால்கள் : கோசல நாடு மிகவும் பரந்து பட்டது. அதன் எல்லையை யாராலும் காலால் நடந்து அறிய முடியாது.