பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 69 தாள். அமைதியான நீருடைய அத்தடாகத்தில் அவளது உருவம் அப்படியே தெரிந்தது. உடனே அவள் சிரித்தாள். தடாகத்தில் தெரிந்த உருவமும் சிரித்தது. தான் சிரித்ததால் பதிலுக்கு தடாகத்துப் பெண் சிரித்ததாக அவள் எண்ணி, இவள் நம்பால் அன்புடைய தோழி யாவாள்; இவளுக்கு நாம் ஏதாவது நன்கொடை அளிக்க வேண்டும் எனக் கருதித் தான் அணிந்திருந்த மணி மாலையைக் கழற்றித் தடாகத்தில் எறிந்தாளாம். ேைதன் உகுநறவ மாலைச் செறிகுழல் தெய்வம் அன்னாள் தானுடைக் கோல மேனி தடத்திடைத் தோன்ற நோக்கி நான் நக நகுகின்றாள் இக்கல நுதல் தோழியாம் என்று ஊனமில் விலையில் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும்” (8) கையும் கண்ணும் : சிற்றரசன் ஒருவன் தன் நீண்ட கையினால் ஒரு பெண்ணுக்குக் குறிப்புக் காட்ட (சாடை காட்ட), அந்தப் பெண் அவளுடைய தோழியின் கண்களால் பதிலுக்குக் குறிப்பு காட்டச் செய்தாள். தாழ கின்ற ததை மலர்க் கையினால் ஆழிமன் ஒருவன் உரைத்தான்; அது விழியின் கனிவாய் ஒரு மெல்லியல் தோழி கண்ணில் கடைக்கணின் சொல்லினாள் (28) iழியின் கனிவாய் = விழிப்பழம் போன்ற வாய். டவன் கையால் பேசினான். பெண்ணாதலின் நாணத் தால் தான் நேரில் கண்ணால் பேசாமல், கண்ணாலேயே தன் தோழிக்குக் குறிப்பு காட்ட தோழி தன் கண்ணா லேயே அவனுக்குக் குறிப்பு காட்டினாள். கண் து தாகச் செயல்படுவதாகத் திருத்தக்க தேவர் தம் சிந்தாமணி நூலில் шт-5