பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பால காண்டப் காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்எனும் துதினால் துணி பொருள் விளக்கி' (1485) என்று கூறியுள்ளார். கண்கள் ஒத்துப் பேசிக் கொண்டால் வாய்ச் சொற்கட்கு வேலையில்லை என்னும் கருத்தில், கண்னொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' (1100) எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். திரையோவியத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல் பகுதி ஒன்றை இங்கே நினைவு செய்ய ஒப்புதலுடன் பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இங்கே தெரிவிக்கிறேன் : பம்பரக் கண்ணாலே ஒரு சங்கதி சொன்னாளே - (பல ஆண்டுகட்கு ஒருமுறை திரையோவியம் பார்க்கும் நான் இந்தப் பாடல் பகுதியை வெளியில் கேட்டுள்ளேன்.) திரை ஒவியப்பாடலை மட்டமாக எண்ணக்கூடாது. கம்பர் கூறியுள்ள பெண்களின் கண்களும் பம்பரக் கண்களே 'நயன பாஷை என்பது இதுதான். உண்டாட்டுப் படலம் கிலவொளியின் பரப்பு: மிதிலை செல்பவர்கள் வழியில் நிலவொளியில் உண்டு இன்புறுகின்றனர். நிலவின் ஒளி எங்கும் பரந்தது. அதனால், எல்லா ஆறுகளும் கங்கை போலவும், எல்லாக் கடல்களும் பாற்கடல் போலவும், எல்லா மலைகளும் அழிவில்லாத சிவனின் கயிலைமலை போலவும் தோன்றின. இதற்குமேல் நிலவின் பெருகிய பரப்பை என்ன என்று சொல்வது! பாடல் : "ஆறெலாம் கங்கையே ஆய; ஆழிதாம் கூறுபாற் கடலையே ஒத்த குன்றெலாம்