பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 71 ஈறிலான் கயிலையே இயைந்த, என் இனி வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே' (3) நிலவொளி வெண்மையானது. எனவே, அது பரந்த இடம் எல்லாம் வெண்மையாயினவாம். வெண்ணிறமான கங்கை போலவே மற்ற ஆறுகளும், வெண்ணிறமான பால் கடல் போலவே மற்ற கடல்களும், வெண்னிறமான கயிலையைப் போலவே மற்ற மலைகளும் ஆயின என்று கூறுவதன் வாயிலாகக் கம்பர், நிலவின் வெள்ளொளிப் பரப்பை விளக்கியுள்ளார். கடிமணப் படலம் நெடிதோ நெறி : திருமணத்திற்கு முன் இராமன் சீதையை எண்ணி நைகின்றான்; தன் நெஞ்சை வைகின்றான்: என்னை விட்டு மான் அனைய அப்பெண்ணிடம் சென்றுவிட்ட என் மனமே! என்னை ஒரு முறை கூட நினைக்கமாட்டாய். நீ அப்பெண்ணைத் தேடிப்போன வழி நெடுந்தொலைவோ? அதனால்தான் இன்னும் திரும்பவில்லையோ! அவளிட மிருந்து நீ விடை பெறவில்லையோ! அவள்தான் என்னை மறப்பினும், நீயும் என்னை மறந்துவிட்டாயே, ஐயகோ! பாடல்:

  • கினையாய் ஒருகால்; நெடிதோ நெறிதான்

வினவா தவர்.பால் விடைகொண் டிலையோ புனமான் அனையா ரொடு போயின என் மனனே எனை நீயும் மறந்தனையோ?” (16 தன் மனம் தன்னை விட்டுச் சென்று சீதையிடமே இருக்கின்றதாம் என்பது, தன் நெஞ்சு அவளையே எண்ணிக் கொண்டுள்ளது என்னும் பொருளது. இன்னும் திரும்பாததால்,போக்கு வரவு வழி நெடுந்தொலைவோ என ஐயுறுவதுபோல் கூறுகிறான். இதில் இன்னொரு செய்தியும் மறைந்துள்ளது. விரைந்து செல்வதில் மனமும் காற்றும் வல்லவை என்னும் கருத்தில் மனோ வேகம் வாயு வேகம்? என்பது உலகியல். மிகவும் விரைந்து சென்ற ஒருவரை,