உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதவியல்]

55

வது என்பது இந்த வார்த்தையின் அர்த்தம். அலர்தல் = விரிதல். இதில் அலர் என்ற பகுதியால் உணர்த்தப்படும் தொழிலாகிய அலர்தலுக்கு அலரி என்ற வார்த்தையால் உணர்த்தப்படும் பொருளாகிய புஷ்பம் கர்த்தா ஆதலால் இங்கே இ விகுதி கர்த்தாப் பொருளில் வந்ததென்று கொள்க.

ஊருணி: என்பது கிணற்று நீர்: ஊராரால் உண்ணப்படுவது, என்பது பொருள். இதில் ஊருண் என்பது பகுதி. இதனால் உணர்த்தப்படும் தொழிலாகிய உண்ணுதலுக்கு இவ்வார்த்தையா லுணர்த்தப்படும் கிணற்றுநீர் உண்ணப்படுவது ஆகிய செயப்படுபொருள் ஆதலால் இங்கு இ விகுதி செயப்படுபொருளில் வந்திருக்கின்றதென்று கொள்க.

இந்த உண் என்ற பகுதியால் உணர்த்தப்படும் தொழிலுக்குக் கர்த்தா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/56&oldid=1468893" இலிருந்து மீள்விக்கப்பட்டது