இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
[எழுத்ததிகாரம்
மண்வெட்டி: இதன் பகுதியாலுணர்த்தப்படும் வெட்டுதலாகிய தொழிலுக்கு மண்வெட்டி என்ற வார்த்தையாலுணர்த்தப்படும் ஆயுதம் கருவியாதலால் இ விகுதி இங்கே கருவிப் பொருளில் வந்ததென்று கொள்க.
இதன் பகுதித்தொழிலில் கர்த்தா செயப்படுபொருள் இவை எவை?
7. இடைநிலை. - பெயர்ச்சொல்லின் இடைநிலைக்குப் பொருள் இல்லை. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பதால் இடைநிலை எனப்பட்டது. இவ்வாறே பகுதியை முதனிலை என்றும் விகுதியை இறுதிநிலை என்றும் சொல்வதுண்டு.
உ - ம். வலைச்சி: இப்பெயர்ச்சொல்லில் ச் என்பது வலை என்ற பகுதிக்கும் சி என்ற விகுதிக்கும் இடையில் நிற்பதால் இடைநிலை என்றுகொள்க.
வினையிடைநிலை ஒன்பது. அவை காலத்தையுணர்த்தும்.அவற்றுள் :--