பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பால போத இலக்கணம்.

91.--தத்தம் பொருளைத் தெரிவிக்கும் இடைச்சொற்கள் எவை? எ, ஒ, உம், மற்று முதலிய இடைச்சொற் கள் தத்தம் பொருளைத் தெரிவிப்பனவாம்.

உண்டே கடவுள் ... (ஏ) ... தேற்றப்பொருள் அவனே எடுத்தான்் ... (ஏ) . . பிரிநிலைப்பொருள் ஆனே பெண்ணுே ... (ஓ) ... யேப்பொருள் அவனே கொடுத்தான்்... (ஓ) ... வினப்பொருள் இராமனும் கண்ணனும் (உ.ம்) ... எண்ணுப்பொருள் மற்றென்று தந்தான்் ... (மற்று) பிறிது என்னும்

பொருள் பயிற்சி-13,

அடியில் வரும் சொற்களில் இடைச்சொற்களை எடுத்துக் காட்டி, அவை இன்ன இன்ன பொருளில் வந்தனவென்று சொல்லுக.

அவனே கொடுத்தான்் அவனே எடுத்தான்் ஆறும், குளமும், சோலையும் ஊருக்கு அழகு.

மனிதனே கட்டையோ. அரசனே குடிகளுக்குக் காவல்.

4. உரிச்சொல்.

92.-உரிச்சொல்லாவது யாது?

பெயர் வினைகளின் குணத்தை உணர்த்தி அவற்றுக்கு உரிமை பூண்டு நிற்கும் சொல், உரிச்சொல்லாம்.

குறிப்பு:-உரிச்சொல் பெயர் வினைகளை விட்டுத் தனித்து கில்லாது.