இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இல்லையே
கொம்புள்ள
மிருகங்காள்
கூடி ஒடி வாருங்கள்.
கொம்பெனக்கு
இல்லையே,
குத்திக் கீழே தள்ளவே!
வாலுள்ள மிருகங்காள்!
வந்து என்னைப் பாருங்கள்.
வாலெனக்கு இல்லையே,
வளைத்து நீட்டி ஆட்டவே!
17