இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாட்டி எங்கள் பாட்டி-எல்லாப்
பல்லும் போன பாட்டி.
கேட்கக் கேட்கக் கதைகள்-இன்னும்
கேட்கச் செய்யும் பாட்டி.
கடின மான பண்டம்-அதைக்
கடிக்கத் தெரியாப் பாட்டி.
படிப்பே யில்லாப் பாட்டி-ஆனால்,
பலவுங் கற்ற பாட்டி.
விடுக தைகள் போட்டே-என்னை
விழிக்க வைக்கும் பாட்டி.
குடுகு டுவய தாச்சு-கையில்
கோல்பி டிக்கும் பாட்டி.
19