இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அப்பா அடித்துப் போட்டால்-என்னை
அணைத்துத் தேற்றும் பாட்டி.
தப்போ, தவறோ செய்தால்-என்னைத்
தடுத்துத் திருத்தும் பாட்டி.
சாய்ந்து மடியில் படுத்தால்-என்னைத்
தட்டிக் கொடுக்கும் பாட்டி.
நோய்கள் ஏதும் வந்தால்-அதை
நொடியில் போக்கும் பாட்டி.
யாருங் காட்டா அன்பை-என்றும்
எனக்குக் காட்டும் பாட்டி.
நூறு, நூறு ஆண்டு-இன்னும்
நூறு ஆண்டு வாழ்க.
20