10
பாலஸ்தீனம்
‘மாண்டேடெட் நாடு’[1] என்றும், அரசியல் வழக்கில் கூறுவார்கள்.
சர்வதேச சங்க ஒப்பந்தத்தின் 22வது ஷரத்துப்படி, ‘மாண்டேடரி’ ஆட்சிக்குட்படுத்தப் பெறும் நாடுகள் அ, ஆ, இ என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அந்தந்த நாடுகளின் பூகோள அமைப்பு, ஜனங்களின் அரசியல் பரிபக்குவ நிலை, பொருளாதார நிலை முதலியவைகளைப் பொறுத்து இந்தப் பாகுபாடு செய்யப்பட்டிருக்கிறது.
பிரிவு அ: சுதந்திர நாடுகளென்று தற்காலிகமாக அங்கீகரிக்கப் படலாமெனக் கருதப்பட்டவையும், முன்னர் துருக்கிய ஏகாதியத்தியத்துக்குட் பட்டிருந்தவையுமான நாடுகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை. இங்ஙனம், சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கத்தக்கவையே யெனினும், இவை தங்கள் சுயபலத்தைக் கொண்டு ஆளக் கூடிய நிலைமைக்கு வரும் வரையில், ‘மாண்டேடரி’ அரசாங்கமானது, இவற்றிற்கு அரசாங்க நிருவாக சம்பந்தமாக ஆலோசனைகள் கூறிக் கொண்டிருக்கும்.
பிரிவு ஆ: மத்திய ஆப்ரிக்காவிலுள்ள நாடுகள். இந்த நாடுகளில் வசிக்கும் பிரஜைகளின் மதம், நாகரிகம் முதலியவற்றின் உரிமைக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பதும், அடிமைத் தொழில், ஆயுதங்களை உற்பத்தி செய்து, அதில் வியாபாரம் செய்தல், மதுபான வியாபாரம் முதலியன நடைபெறாமல் தடுப்-
- ↑ Mandated Territory.