உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பால்பர்‌ அறிக்கை

11

பதும், ‘மாண்டேடரி’ அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பிரிவு இ: தென் மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள சில பிரதேசங்களும், பசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள தீவுகளும், இந்தப் பிரிவைச் சேர்ந்தவை. நில விஸ்தீரணம், ஜனத் தொகை முதலியன குறைவாயிருப்பதாலும், இங்குள்ள ஜனங்கள் அதிக நாகரிகமில்லாதவர்களாயிருப்பதாலும், இந்த நாடுகளை ‘மாண்டேடரி’ அரசாங்கத்திற்குட்பட்ட ஒரு நாட்டின் உட்பிரிவாகக் கருதி ஆளலாம்.

இந்த மூன்று பிரிவைச் சேர்ந்த நாடுகளின் விவரத்தை அநுபந்தத்தில் பார்க்க.

1920ம் வருஷம் ஏப்ரல் மாதம் 24ந் தேதி சான் ரிமோ என்ற நகரத்தில் கூடிய சமாதான் மகாநாட்டில், சர்வதேச சங்கத்தின் மேற்படி 22வது ஷரத்துப்படி, பாலஸ்தீனத்தின் நிருவாகம் பிரிட்டன் வசம் ஒப்புவிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதனை 24-7-1922ல் சர்வதேச சங்கம் ஊர்ஜிதம் செய்தது. இந்த அதிகாரப் பத்திரத்தில், 28 ஷரத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றின் சாரத்தை மட்டும் இங்குத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

பாலஸ்தீனத்தில் ‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ ஏற்படுவதற்கு அநுகூலமாக அதன் அரசியல், நிருவாக, பொருளாதார நிலைமைகள் அமைக்கப்பட வேண்டும். மேற்படி யூதர்களின் தேசீய ஸ்தல சம்பந்தமான விஷயங்களில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/21&oldid=1671390" இலிருந்து மீள்விக்கப்பட்டது