இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
பாலஸ்தீனம்
1936 வருஷம், அகில உலக ஜையோனிய ஸ்தாபனத்தின் தலைவனான டாக்டர் வீஸ்மான் பின் வருமாறு கூறினான் :--
எங்கள் பொறுப்பை நன்கு உணர்ந்து கொண்டு, அராபியத் தலைவர்களுக்கு நாங்கள் கூறுவதென்னவென்றால், இன்று நாங்கள் சிறுபான்மையோராக இருக்கலாம்; நாளை நாங்கள் பெரும்பான்மையோராகி விடலாம். இன்று நீங்கள் பெரும்பான்மையோராக இருக்கலாம்; நாளை நீங்களே சிறுபான்மையோராகி விடலாம். பாலஸ்தீனத்திலே என்ன நடைபெற்றாலும் சரிதான்; நாங்கள் பிறரை ஆதிக்கம் செலுத்தவும் விரும்பவில்லை. பிறரால் ஆதிக்கம் செலுத்தப்படவும் விரும்பவில்லை.