உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பாலஸ்தீனம்

2. பால்பர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முறைகள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரப் படுமானால், அரசியல் விஷயத்திலும், பொருளாதார விஷயத்திலும் தாங்கள் அடிமைகளாகவே இருக்கும்படி நேரிடும் என்ற அராபியர்களின் நம்பிக்கை.
3. உலகத்திலுள்ள எல்லா முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும் என்ற இயக்கம் அராபியர்களிடையே பரவி வந்தது.

1921ம் வருஷம் ஜாபா நகரத்தில் ஒரு கலகம் ஏற்பட்டது. அது போழ்து, யூதர்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்; 146 பேர் காயமடைந்தனர். போலீஸார் இந்தக் கலகத்தை அடக்கியதன் விளைவாக, அராபியர்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். 73 பேருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தக் கலகத்தின் காரணங்களைப் பற்றி விசாரிக்க நியமனம் செய்யப் பெற்ற கமிஷன், தன் அறிக்கையில், யூதர்களின் குடியேற்றத்தினால் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாறுதல்களினால், அராபியர்களுக்குக் கோபம் ஏற்பட்டு, அது யூதர்கள் மீது கலகமாகக் கிளம்பியது என்று குறிப்பிட்டிருக்கின்றது.

இவைகளைக் கொண்டு நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், மத வெறியினால் இந்தக் கலகங்கள் ஏற்படவில்லையென்பது நன்கு புலனாகும். உண்மையான தேசீய உணர்ச்சிதான், அராபியர்களை இங்ங-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/56&oldid=1672136" இலிருந்து மீள்விக்கப்பட்டது