கலகங்கள்
47
னம் கலகம் செய்யும்படி தூண்டியது என்னலாம். சாதாரணமாக, பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவ அராபியர்களுக்கும், முஸ்லீம் அராபியர்களுக்கும் பரஸ்பர அவநம்பிக்கை உண்டு. ஒருவரை யொருவர் எப்பொழுதும் சந்தேகித்த வண்ணமா யிருப்பார்கள். ஆனால், இந்தக் கலகங்களின் போது, இவர்கள் தங்கள் பரஸ்பரப் பகைமைகளையெல்லாம் மறந்து, பொதுச் சத்துருவுக்கு விரோதமாக ஒன்றுபட்டுக் கலகத்தில் இறங்கினார்கள். இஃது எதைக் காட்டுகிறது? அராபியர்களிடையே உட்பிணக்குகள் எத்தனை யிருந்த போதிலும், அவை, தேசீய சுதந்திரம் என்ற பெரிய லட்சியத்திற்கு முன்னர் அடங்கி ஒடுங்கி விடுகின்றன. இதனை தேசீய உணர்ச்சி என்று கூறாது, யூத துவேஷம் என்று உலகத்திலுள்ள முதலாளி வர்க்கம் பறைசாற்றுகிறது. ஆனால், அராபியர்களுக்கு அதைப் பற்றி என்ன கவலை?
1922ம் வருஷத்தில் ஓர் அராபியப் பிரதிநிதிக் கூட்டம் பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு மந்திரியைப் பேட்டி கண்டு பேசிய போது, ‘மாண்டேடரி’ நிருவாக அரசாங்கத்தை அராபியர்கள் அடியோடு நிராகரிக்கிறார்கள் என்றும், பாலஸ்தீனத்திற்கு உடனே பரிபூரண சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி யிருக்கிறார்கள். இதற்குக் கண் துடைப்பாக ஒரு சட்டசபையை ஏற்படுத்திக் கொடுப்போமென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தார் கூறினர். ஆனால், அராபியர்கள் இதனை மறுத்து விட்டார்கள். இந்த ஆசைத் தூண்டுதலுக்கு அவர்கள் இணங்காமற்