பக்கம்:பாலும் பாவையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நம்முடைய புத்தி இரண்டு நாட்களாகத் தடுமாறுகிறது!’ என்று அவன் தனக்குத் தானே முனு முணுத்துக் கொண்டான். அடுத்த கணம் எதற்கும் கீழே சென்று சாப்பிட்ட இடத்தில் பார்த்தால் என்ன?’ என்று தோன்றிற்று அவனுக்கு. சட்டென்று திரும்பி, மாடிப் படிகளில் இறங்கினான். - அதே சமயத்தில், “நில்லுங்கள்; சாவியைத் தானே தேடிக்கொண்டு வருகிறீர்கள்?’ என்று கேட்டுக்கொண்டே, அகல்யா அவனுக்கு எதிரே வந்தாள். அப்போது, அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஏற்றாற்போல் அவளுடைய இடை அசைந்தது. அந்த அசைவுக்குத் தகுந்தாற்போல அவள் பின்னலும் ஆடி அசைந்து அழகுக்கு அழகு செய்தது! அவ்வளவுதான்; கனகலிங்கம் தன்னை மறந்தான்-தன் சாவியையும் மறந்தான்! 'ஆஹா ! இந்தக் காட்சியை முன்னாலிருந்து பார்ப்பதைவிடப் பின்னாலிருந்து பார்த்தால் எவ்வளவு அற்புதமாயிருக்கும்!’ என்று எண்ணி அவன் மனம் பரவசமடைந்தது. அதற்குள் இன்னொரு காட்சி!-அவள் இடறி விழாமலிருப்பதற்காகத் தன் புடவைத் தலைப்பை ஒருகையால் கொஞ்சம் தூக்கிப் பிடித்துக் கொண்டு மேலே மேலே வந்து கொண்டிருந்தாள். அதன் காரணமாக உள்ளே அணிந்துகொண்டிருந்த சித்திரப் பாவாடை கொஞ்சம் வெளியே தலையை நீட்டிக் கொண்டிருந்தது. முதலில் அதைப் பார்க்க வேண்டாமென்றுதான் நினைத்தான் அவன். ஆயினும் மனம் கேட்கவில்லை; பார்த்தான். “என்ன பார்க்கிறீர்கள்?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள். அவன் திடுக்கிட்டு, “ஒன்றுமில்லை!” என்று அசடுவழியச் சொன்னான். அதற்குப் பிறகு என்னத்தைச் சொல்ல?-அவனும கீழே இறங்கவில்லை அவளும் மேலே ஏறவில்லை! இருவரும் கண்கள் படபடக்க, இதழ்கள் துடிதுடிக்க, நின்றது நின்றபடி ஒருகணம் நிலை குலைந்து நின்றார்கள்.