பக்கம்:பாலைக்கலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 7 தொல் கவின் தொலைதல் அஞ்சி, என் சொல் வரைத் தங்கினர், காதலோரே. நான்முகன் முதலாகத் தேவர் பலரும் சென்று வேண்டச் சினத்துடன் சென்று முப்புரங்களையும் எரிக்கச் சிரித்த சிவனின் முகம்போலக் கதிரவன் தீப்பிழம்பாக்கிச் சுடுகின்றான். அம் முக்கண்ணான் பார்க்கவும், அம் முப்புரமும் கெட்டழிந்தது போல, அக் கதிரவனின் வெம்மையால் மலைகளெல்லாம் வெடித்துச் சிதறிப் பாதையை அடைத்துக் கொண்டு கிடக்கின்றன. அழலை விழித்தாற்போலத் தோன்றும் அவ்வழியாக நீயும் செல்ல நினைக்கிறாய். உன்னைப் பிரிந்த தலைவி இங்கே ஆற்றாது அழியவும், நீ அங்கே சென்று சாகத் துணிந்தனை போலும் ஐயனே, யான் சொல்வதையும் கேட்பாயாக: 'தம் பொருள்களைப் பிறர்க்கு வழங்கித் தொலைத்து விட்டுத் தாம் வந்து நம்பால் இரந்து நிற்பவர் சிலர்; அத்தகை யோர்க்கு நாம் ஏதும் கொடாமற்போவது இழிவல்லவோ? என்று கருதி, மலை பல கடந்து செல்லவும் துணிந்தனை. அவ்வாறு சுரம் பல கடந்து சென்று தேடிவரும் பொருள்தான், பொருளால் பெறும் பயனை நினக்குத் தருமோ? நிலைபெற்ற கற்பினை உடையவளான இவள், நீ பிரிந்தால் உயிர் வாழாது மடிவாளே. இவள் மார்பைத் தழுவியபடியே இவளை வாழச் செய்து, பிரியாதிருத்தலன்றோ உண்மையான செல்வம் ஆகும்! "எம்மிடம் ஏதும் இல்லை; தந்து உதவுக' என்று இரந்தவர் களுக்கு ஏதாவது தராதிருந்தால், அது இழிவல்லவோ?’ என்று நினைக்கின்றாய். அதுவும் ஒரு பொருளாகுமோ? பழைய பண்பாட்டினின்றும் வழுவாமல், நீயே துணையென்று நின்னை மணந்தவள் இவள். இவள் மார்பைத் தழுவியபடி இவளை வாழச் செய்தனையாக, இவளைப் பிரியாதிருத்தலன்றோ உண்மையான பொருள் ஆகும். வேறு போக்கிடம் ஏதுமில்லை; எனக்கு இல்லை யென்னாது உதவுக என்று வந்தவர்க்கு ஒன்றும் கொடாம லிருப்பது இழிவல்லவோ?’ எனக் கருதிக், காடுகள் பலவும் கடந்து சென்று, பொருள்தேடி வருவதற்கு நினைக்கின்றாயே, அதுவும் ஒரு பொருளாகுமோ? வடமீனைப் போலப் பலரும் தொழுது போற்ற விளங்கும் உயர்ந்த கற்பினாள் நின் மனைவி. அவள் அகன்ற மார்பைத் தழுவியவாறு அவளைப் பிரியாதிருத்தல் அன்றோ, உண்மையான பொருள் ஆகும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/15&oldid=822005" இலிருந்து மீள்விக்கப்பட்டது