பக்கம்:பாலைக்கலி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கலித்தொகை மூலமும் உரையும் நீயே, புலம்புஇல் உள்ளமொடு பொருள்வயிற் செலிஇய, வலம் படு திகிரி வாய் நீவுதியே: இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், 15 இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே. என நின், செல் நவை அரவத்தும் இணையவள் நீ நீப்பின், தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ - 20 முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே? முதுவேனிற் காலம்; எங்கும் வெம்மை சுட்டெரிக்கின்றது; பாலை நிலத்திலோ கானல் பறக்கின்ற்து. அந்தக் கானலை, உடலும் உள்ளமும் மெலிந்தவான களிறுகள், நீர் ஓட்டம் என்று எண்ணி, வேட்கை தாளாவாய்ப் பின் தொடர்கின்றன. அத்தகைய பாலையைக் கடந்து சென்று பொருள் தேடி வருவேன் என்கின்றீர்; கேட்டேன். ஆனால் சிறிது நான் சொல்வதும் ஒன்று உண்டு; அதனையும் கேட்பீராக செய்ய நினைத்த செயலை நோக்கிப் போக நினைத்த நீர், வீட்டிலேயே, தும் கையாலேயே செய்த வலிய வில்லினை எடுத்து, நாண்பூட்டித் தெறித்துச்சரிபார்ப்பீர் முழுநிலவை மேகம் மறைத்தாற்போல, இவள் மாசற்ற முகத்தில் அதற்கே பாலை பாய்ந்துவிட, அது தன் ஒளிகுறைந்ததாய் இருண்டு விடுமே! தொழில்வினை நிரம்பிய கைச்சரட்டை இறுக்கிக் கட்டினவராகப் படைக்கலங்களை ஆராய்ந்து பொறுக்கிக் கொண்டிருப்பீர். அப்போதே, மழையை எதிர்நோக்கிச் சுனையிலுள்ள நீலங்கள் நீர் சொரிவது போல, இவள் கண்கள் தாம் கண்ணிரைச் சொரியுமே! பிரிவை எள்ளளவும் நினையாது, தனித்துச் செல்வதனை நினைத்தும் வருந்தாது, பொருள் தேடிவரப் போவதற்கு நினைத்தீர். அதற்காக, வெற்றிச் சிறப்பு விளங்கும் சக்கரப் படையினை நீர் துடைத்தது கண்டே காந்தள் மலர்கள் காற்று அலைப்பக் காம்பறுந்து வீழ்வனபோல, இவள் முன்கை வளைகள் எல்லாம் கழன்று வீழ்ந்தனவே! பிரிந்து செல்வதைக் கருதி நீர் செய்யும் ஏற்பாடுகளைக் கண்டே அவள் துயரம் இவ்வாறானால், நீர் பிரிந்தால் இவள் என்னாவாளோ? நீர் போகும்போதே இவள் நலனும் போய் விட, இவள் இறந்தும் போவாளோ? நீர் வேற்றுநாடு சென்று முயன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/26&oldid=822016" இலிருந்து மீள்விக்கப்பட்டது