பக்கம்:பாலைக்கலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி

19

தேடிவரும் பொருள்தான், இழந்த இவள் உயிரையும் மீட்டுத் தருவதாமோ? அதனைச் சொல்வீராக!

சொற்பொருள்: 1. வேனில் கோடை உழந்த வருந்திய, வறிது உயங்கு உடல் சுருங்கி வருந்தும். ஒய் ஊக்கம் கெட்ட 2. வான் - மழை. வைப்பு - ஊர்கள். வழங்காத்தேர் - பேய்த்தேர் என வழங்கும் கானல்நீர், அவாஅம் - அவாவும். 4. உசாவுகோ - கேட்கட்டுமோ. 5. அயர்ந்து விரும்பி, யாழ அசை 6 உளர்தி - தடவிநோக்குகின்றனை 7. மண்டிலம்’ என்றது திங்கள். மையாப்பது மேகம் பரவுவது.9 காழகம் - கையுறை.10. தெரிதல் - ஆராய்தல். 11. கார் எதிர்தல் - மழையை எதிர்நோக்கி நீர் சொரிதல் 12 இனை நோக்கு வருந்தும் பார்வை. 13. புலம்பு இல் உள்ளம்-பிரிகின்றோம் என எண்ணி வருந்தாத உள்ளம்.14,திகிரி ஆழிப்படை நீவுதி - துடையா நின்றாய். 15. கோடல் - வெண்காந்தள். வீ - இதழ்கள். 16 ஏர் - அழகு எல் - ஒளி இறை முன்கை, ஊரும் ஒடும். 18. செல்நவை அரவம் - செல்லும் துயர்தரும் ஆரவாரம். இனையவள் - துயர் கொள்வாள். 19. தன்நலம் கடைகொள்ளப்படுதல் - இறத்தல்.

7. மன்னும் பொருள் ஏது?

(சொல்லாததேயே பிரிவதற்கு நினைத்த தலைவனின் குறிப்பினையறிந்த தோழி, தலைவியோடு கூடிச் செலுத்தும் இல்வாழ்வு நெறியே பொருளெனக் கூறியது இது)

நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க, கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின், உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம், வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர, 5 விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் சொல்லுவது உடையேன், கேண்மின், மற்று ஐஇய! வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் ஏழும் தம் பயன் கெட, இடை நின்ற நரம்பு அறுஉம் 10 யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது, பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும் திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை 15 வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் - வெளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/27&oldid=1244973" இலிருந்து மீள்விக்கப்பட்டது