பக்கம்:பாலைக்கலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 43 படைக்கலங்களைப் புதிதாக வடித்து அவற்றைப் புனைந்து சரிபார்ப்பான். பாடுதற் சிறப்புடையதான இன்பம் நுகரும் மலரணையிலே ஒருபுறமாக ஒதுங்கிக் கிடந்து ஒடுங்குவான். உன்னைவிட்டுச் சற்றே அகன்றிருக்கும் வேளையில், தான் பிரிந்தால் உன் நிலைதான் என்னவாகுமோ? என்ற கவலையால் பெருமூச்செறிவான். இவற்றை எல்லாம் அறிந்த நீ, இவன் உள்ளத்திலே கொண்டுள்ள எண்ணந்தான் யாதோ?’ என்று எண்ணி வருந்தித் துயருறுவாய். அவன்பால் அன்போடு மனம் ஒத்து இணைந்திருக்காமல், மிகவும் ஏங்கி நடுங்குதல் கண்டவளாகவும் இருப்பாய். நறிய நுதலையுடையவளே! நான் சொல்வதனைக் கேள்: "பழைய அழகெல்லாம் தொலைந்துபோக, இவள் துயரால் நலிந்து வாட, நீ இவளைத் தனியேவிட்டுப் பிரிந்து சென்று, மிக வல்லாண்மையான செயல்களைச் செய்து புகழ் பெறுவதை நினைக்கின்றாயோ? அவ்வாறு நீ செய்வதற்குள், நீண்ட கதிர்கள் சொரிய விளங்குகின்ற சந்திரனின் நிறைவினைப் போலநிலைத்து இராமல், நாளுக்குநாள் நிலைகெட்டு, இவள் அழகிய உடல் நலனும், அழிவதன்றி நிலைத்திருக்குமென்றோ எண்ணுகின்றாய்? ஆற்ற முடியாத காமநோய் வருத்த, இவள் அழகு முழுதும் வாடிவிடுமே? அதனை எண்ணாது, அன்று நீ பிறர் கண்முன் சிறப்பாகத் தோன்றும் பொருள்களைத் தொகுக்க முயல்கின் றாயோ? நீ முயற்சி செய்துகொண்டிருக்கும் காலத்திலேயே, நாற்றம் அமைந்த பெருமைமிகுந்த பொய்கையிலேயுள்ள, இலைகளுக்கு இடையே முகிழ்க்கும் முகைகட்குக் கூற்றத்தைப்போல வந்து, அவற்றின் வாழ்நாளைக் குறைக்கும் நாள் என்னும் காலமும், இவள் உயிரை வாங்காது இவளை உயிரோடும் நிலைத்திருக்க விடுமோ? வகையோடு அமைந்த இவளுடைய வனப்பு எல்லாம் தேயுமாறு, இவளைப் பிரிந்துபோகவும் நீ முயல்கின்றாய். நீ தொழிலாற்றப் பிரிந்தகாலத்திலேயே, அழகான வண்டு வந்து தன் புதுமையை அநுபவிக்கும்படியாகப் பூந்தாதுகளோடு விளங்கும் குளிர்ந்த மலரின் முகைக்கு வாய்த்த மலர்ச்சி போல மலர்ந்திருக்கும், இவள் தன் இளமைச் செவ்வியும் அழிந்துவிடுமே! அல்லாது, அது தான் நிலைத்திருக்குமென்றோ நீயும் நினைத்தாய்?’’ என்றெல்லாம் பொருத்தமாக, யான் அவன் விரும்பிய பொருளார்வத்தினால் விளையும் கேடுகளை நினைந்து கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/51&oldid=822044" இலிருந்து மீள்விக்கப்பட்டது