பக்கம்:பாலைக்கலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Heòyää G¢âēšr *_urenewä seò 53 செறிமுறை - செறிந்து நிற்கும் பற்கள். 1. பறிமுறை வீழ்ந்து போகும் நிலை. 14. செய்வினை - கூந்தலுக்குப் பொய்க் கூந்தல் புனைந்து செய்யும் செயற்கை அழகு. 15. பாசரும்பு - முற்றாத இளைய அரும்பு. 21. படர்கூற - துன்பத்தைச் சொல்ல. தொடர்கூர - அன்புத் தொடர்பு மிகவேண்டிய காலத்தில் 22. துவ்வாமை - நுகராமைக்குக் காரணமாகிய தீவினை. இதுவும், உரிமையால் தலைவியைத் தானாகவே கொண்டு கூறியதாகும். 22. உண்ணேன் வாழேன்' (தலைவனின் பிரிவுக்கு ஆற்றாமல் உடன் செல்லத் தலைவி துணிந்தும், அவன் இசையாதுபோக, அவள், தான் அடையப் போகும் நிலையை இப்படிக் கூறுகின்றாள். 'நீ வருத்தினாலும் என்னை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். நீ கைவிட்டால் பலர் ஏச்சுக்கும் உள்ளாகி அழிவேன். இனி உன் விருப்பம் போலவே செய்க என்று, உளம் நைந்து கூறுகின்றாள்.) இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும் விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல் நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே: - 5 இனி யான், உண்ணலும் உண்ணேன், வாழலும் வாழேன். தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள் நீர் உண்ட குடை ஒரன்னர். நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் 10 அல்குநர் போகிய ஊர் ஒரன்னர். கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓரன்னர். என ஆங்கு, யானும் நின்னகத்து அனையேன், ஆனாது, 15 கொலை வெங் கொள்கையோடு நாய் அகப்படுப்ப, வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல, நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே. புனத்திலே யானை வந்து அழிவு விளைவிக்க முயல, அதன் மீது காவல்பூண்டவர் வீசி எறிந்த கல்லானது. மலைச் சாரலிலுள்ள மரக்கொம்புகளிலுள்ள பூக்களைச் சென்று தாக்கி, அவற்றை உதிர்ந்து வீழச்செய்யும். அவ்வளவு வளஞ்செறிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/61&oldid=822055" இலிருந்து மீள்விக்கப்பட்டது