பக்கம்:பாலைக்கலி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கலித்தொகை மூலமும் உரையும் 33. அவர் கையாலேயே துடைப்பார்! ("அழுது ஏனடி புலம்புகின்றாய். அதோ அவரே வந்து விட்டார். அவரே உன் கண்ணிரைத் துடைப்பார்” என்று தலைவிக்குத் தோழி சொல்லுகின்றனள்) d மன்னுயிர் ஏமுற, மலர்ஞாழல் புரவுஈன்று, பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின், சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற, முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண் பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல், 5 பல் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப, இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் - விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும், பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன், மறைப்பவும், கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, 10 எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும்.ஆயின், எவன் செய்கோ? பொறை தளர் கொம்பின்மேல் சிதரினம் இறை கொள, நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன், மறைப்பவும், முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு, பொறை தளர்பு பனி வாரும் கண்ஆயின், எவன் செய்கோ? 15 தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும், கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன், மறைப்பவும், கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று, வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவ்ன் செய்கோ? என ஆங்கு, - - 2O நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா நாம் எண்ணிய நாள்வரை இறவாது, காதலர் பண்ணிய மாவினர் புகுதந்தார் - கண் உறு பூசல் கை களைந்தாங்கே. இளவேனில் வந்துவிட்டது. உயிரினம் வாழ வேண்டும் என்ற பெருநோக்கத்தால், கால்வாய்கள் வழியாகப் புவியெங்கும் பரவிப் பாய்ந்து நீருட்டிய ஆற்றிலே, நீரும் வற்றிவிட்டது. மணலொடு சேர்ந்து போவதுபோலக் கால்வாய்களில், குறைந்த அளவே தண்ணிரும் சென்று கொண்டிருக்கிறது. முன்னர், ஆறு தந்த வெள்ளத்தை உண்ட மரங்கள் எல்லாம், இப்போது மலர்கள் நிறைந்து, பிஞ்சும் பூவுமாக வண்டுகள் ஒலி முழங்கவும், தும்பிகள் ஆர்ப்பவுமாக விளங்குகின்றன. முன், ஒரு பொருளைத் தமக்கு உதவியவர் வருந்தி வாடும் நாளிலே, அவருக்குத் தாமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/84&oldid=822081" இலிருந்து மீள்விக்கப்பட்டது