பக்கம்:பாலைச்செல்வி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இ. புலவர் கா. கோவிந்தன் வருந்தும், 5. கடும் தாம் பறிபாங்கு-விரைவாகப் பதித்தவிடத்து, தெறப்பட்டு-சுடப்பட்டு, 6. வெறிநிரை-வெறிகொண்ட யானை வரிசை சாரல் சார ஓடி என மாற்றுக. 7. நெறி மயக்குற்ற-பலப்பல வழிகள் உண்டான, நிரம்பா-வழிக்குரிய இயல்புகளைப் பெறாத; அல்லது அவ்வியல்புகளை இழந்த; 12. நின் பாணி-நீ கூறுமாறு நின் ஆணைக்குள்: 14. கழிதல் உறாஅவைக் காண்டை-பயன் இன்றிக் கழிந்து போகாவாறு பார்த்துக்கொள். 15. கடைநாள்-வாழ்க்கையின் இறுதிநாள்; 16. புகர்பட-குற்றம்பட பயனற்றுப்போமாறு; 17. வேற்றுமைகொண்டு-அக்காமத்தோடு வேறுபட்டு, 18, ஒராஅங்குஒருபடிப்பட, அதாவது முழுதும்; மறந்தாரோடு மாற்றுமை கொண்ட வழி போற்றுவாய் என மாற்றுக; கூற்றமும் மூப்பும் மறந்து-காதல் இன்பத்தை இழந்து பொருள் தேடிப் போவாரோடு மாறுபட்டு, கூற்றமும், மூப்பும் உண்டென உணர்ந்து, பொருள்தேடிச் செல்லாது காதல் இன்பத்தைத் துய்க்கக் கருதுவாயாக என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/100&oldid=822100" இலிருந்து மீள்விக்கப்பட்டது