பக்கம்:பாலைச்செல்வி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ↔ 97 'இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடுநவையார் ஆற்று அறுகனை முற்றி, உடங்குநீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு, 5 வெறிநிரை வேறாகச் சாரல் சாரல் ஒடி நெறி மயக்குற்ற நிரம்ப நீடுஅத்தம், சிறுநணி நீதுஞ்சியேற்பினும் அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயின் செல்வோய்! உரனுடை உள்ளத்தை செய்பொருள் முற்றிய 10 வளமையான் ஆகும் பொருள்.இது என்பாய்! இளமையும் காமமும் நின்பாணி நில்லா; இடைமுலைக் கோதை குழைய முயங்கும் முறைநாள் கழிதல் உறாஅமைக் காண்டை; கடைநாள்இது என்று அறிந்தாரும் இல்லை; 15 போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்வயின் போகுவாய்! கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஒராஅங்கு மாற்றுமைக் கொண்ட வழி.” தலைமகன் பொருள்வயிற் பிரிவன் என்பது அறிந்த தோழி, காட்டின் கொடுமை, தலைவியின் மென்மை, நாளது சின்மை, இளமையது அருமை முதலாயின கூறிச் செலவழுங்குவித்தது இது. - 2. கொடுமரம்-வில், தேய்த்தார்-கொல்லப்பட்டவர் பதுக்கை-பிணக்குவியல் மறையுமாறு போட்ட இலைக்குவியல், 3. கடுநகை-கொடிய குற்றம், ஆர்- நிறைந்த அறுசுனை-நீர் அற்ற சுனை; முற்றி-சூழ நின்று, 4. உடங்கு-வருந்திய, உயங்கு பாலை-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/99&oldid=822364" இலிருந்து மீள்விக்கப்பட்டது