பக்கம்:பாலைச்செல்வி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஒ. புலவர் கா. கோவிநதன அடைதலும் உண்டு. பொருள் தேடி வந்து, போகம் நுகர்வதற்கு முன்னரே, அவர் உயிர் போயினும் போம். மேலும் இளமையில் இன்ப நுகர்வு இல்லாத மனம், பிற்காலத்தில் அமைதி இழந்து, எதிலும் ஆழ்ந்து நிற்காது அலையும் ஆதலின், அவ்வின்பத்தை நுகர வேண்டிய நாட்கள் அதை நுகராது, பயனற்றுப் போகாவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது, பெருநோக்குடைய பெரியோர்கள் கடனாம். "ஆகவே, அன்ப! காதல் இன்பம் கெட்டுப்போமாறு, அவ்வின்ப நுகர்வில் கருத்தைச் செலுத்தாது, பொருள் தேடிப் போகும் நின் போக்கு நன்றன்று. அது இளமை கழிதலும், முதுமை பெறுதலும், பிறந்தவர் இறத்தலும் உலகியற்கை என்பதை மறந்து, உலக ஒழுக்கத்தோடு மாறுபட்ட மாண்பிலாச் சிறியோர் செல்லும் வழி. அது நினக்குப் பொருந்தாது. இளமை கழியும். முதுமை வந்தடையும். பிறப்புண்டேல் இறப்புண்டு என்பதை உணர்ந்து, அவ்வப் பருவத்தில் ஆற்ற வேண்டும் கடமை களை, அவ்வப் பருவத்தில் ஆன்றோர் காட்டும் அறநெறி நின்று, இன்பம் நுகர வேண்டிய இளமைக் காலத்தை, இல்லின்கண் தின் மனைக் கிழத்தியோடிருந்து, இன்பம் நுகர்ந்து கழிக்கக் கருதுவாயாக. இன்பம் நுகர வேண்டிய இப் பருவத்தைப் பொருள் தேடிப் போகும் முயற்சியில் கழித்து, வளங் கொழிக்க வேண்டிய நின் வாழ்க்கையை வறண்ட பாலைவனமாக்கிப் பாழ்செய்து விடாதே. இது அடியாள் விழையும் வேண்டுகோளுமாம்!” என அறிவுரை கூறி, வாழ்க்கையில் வழுக்கி வீழ இருந்த அவனுக்கு விழுமிய கருத்துக்களை அளித்து வழித்துணை புரிந்தாள். வாழ்க அத் தோழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/98&oldid=822362" இலிருந்து மீள்விக்கப்பட்டது