பக்கம்:பாலைச்செல்வி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 95 பொருளைப் பெரும் அளவில் ஈட்டிய பின்னரே, இன்ப நுகர்வில் நாட்டம் கொள்ளுதல் வேண்டும்! எனக் கருதும் நின் கருத்து பிழைபட்டது. அன்ப! நீ கருதுமாறு பொருள் தேடிப் போகும் நீ, அப்பொருளைத் தேடிக் கொணரும்வரையும், இளமையும், இன்ப உணர்ச்சியும் நின் ஆணைக்கு அடங்கி, நினக்காகக் காத்திருக்கும் என எண்ணுவையாயின், அவ்வெண்ணம் நின் அறியாமை வயப்பட்டதாம். இளமையும் இன்பமும் உறவுடைய, இளமை இன்றேல் இன்பம் இல்லை; இன்பம் இல்லா இளமை, இளமையாகாது. ஆனால், இன்பத்திற்கும் பொருளிற்கும் அத்தகைய தொடர்பேதும் இல்லை. இளமையும், அக்காலத்தே பெறலாம் இன்பமும், பொருள் வரும் காலத்தை எதிர் நோக்கிக் காத்திரா. அவை நாள்தோறும் கழிந்து கொண்டேயிருக்கும். பல ஆண்டு முயன்று, பெரும் பொருள் தேடிக் கொணர்ந்தார் ஒருவர், அப்பெரும் பொருளாலாம் இன்பப் பயனை நுகர்தற்குரிய இளமையழிந்தமை காணின், கண்ணிர் விட்டுக் கலங்குவர். அந் நிலையில், அவர் ஈட்டிய குன்றனைய பெருநிதி, ஈட்டிய அவர்க்கு எள்ளளவும் பயனுடையதாகாது பாழாம். . ." - "மேலும், அன்ப! பொருள் தேடி முடிந்த பின்னர், இன்பம் நுகர எண்ணின், அதுகாறும் இறவாது வாழ்ந்திருப்போம் என்பதற்கு எவ்வித உறுதிப்பாடும் இல்லை. நம்முடைய வாழ்நாள் இத்தனை ஆண்டுகள் வரை உளது என, அதன் எல்லையை அறிந்தார் எவரும் இலர். இறப்பு எந்நேரத்திலும் ஒருவரை வந்தடையும். பொருள் தேடிப் போகும் வழியிலேயே, இறப்பு அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/97&oldid=822360" இலிருந்து மீள்விக்கப்பட்டது