பக்கம்:பாலைச்செல்வி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 135 அரும்பு, அண்மையில் மேற்கொண்ட திருமணத்தால் மலர்ந்து தன் முழுப் பலனையும் பெற்றது. இனிக் கல்வி, பொருள், காவல் முதலாயின கருதிக் கணவன் அவ்வப்போது பிரிந்து போய்விடுவதால், அப்பிரிவினைப் பொறாது, மனைவியின் வாழ்நாட்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து போம். ஆதலின், அக் காதல் இனி வளர்தற்கு மாறாகக் குறைந்து போம். அதனால், நீ விரும்பி மேற்கொண்ட திருமணமே, இவள் வாழ்நாளைக் கொல்லும் கூற்றமுமாய் மாறிக் கொடுமை செய்ய, அதற்கு நின் பிரிவே பெருந்துணையாகி விடுமோ என அஞ்சுகிறது என் உள்ளம். 'அன்ப வண்டுகளை வா என அழைத்து விருந்துTட்ட வல்ல தாதுக்களை நிறையக் கொண்ட மலர்கள் பல மலருமாறு குறைவற நிறைந்த நீரைக் கொண்ட ஒரு நீர்நிலையில் நீர் என்றும் அந்நிலையிலேயே நிறைந்து நிற்பதில்லை. நாள்தோறும், சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து, அம்மலர்களையும் அழித்து, அந்நீர் நிலையின் அழகையும் அழித்து விடும். அதுபோலக், காதல் எனும் மலர், மலர்ந்து மாண்பு தருமாறு, இவள்பால் நிறைந்திருந்த இளமை உணர்ச்சிகள், என்றும் அவள்பால் குறைவறக் குடி கொண்டிருக்கும் எனக் கொள்ளற்க. அவள் காதலும், அக்காதலின் நிலைக்கள னாம் அவள் மேனியும் தளர்ந்து மெலிய, அவ்விளமை, அவளை விட்டுப் போவது உறுதி. ஆகவே, அன்ப! அவள், தன் வாழ்நாள் வற்றி இறந்து போதலும், அவள் காதல் உணர்ச்சி கருகி விடுதலும், அவள் இளமையழகு அழிந்து போதலும் உறுதி. அவை நிலையற்றன. நீ சென்று, உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/137&oldid=822140" இலிருந்து மீள்விக்கப்பட்டது