பக்கம்:பாலைச்செல்வி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ↔ புலவர் கா. கோவிந்தன் வினை முடித்து மீண்டு வருங்கால், அவற்றைக் காண்பதோ, அவற்றாலாம் பயனை நுகர்வதோ இயலாது. ஆகவே, நிலையாத அவை நிலை பெற்றிருக்கும் இக் காலத்தை அவற்றின் பயன் நுகரும் கருத்தில் கழிப்பா யாக!” என வேண்டுவன கூறி வேண்டிக் கொண்டாள். அவள் கூறியன வற்றைக் கேட்டான் அவ்வரசிளங் குமரன். அந் நிலையில் அவன் உள்ளமும் அக் கருத்தே கொண்டிருந்தது. மனைவியை விட்டு வெளிநாடு செல்வது விரும்பத் தக்கதன்று என்ற எண்ண முடையனாய், ஆங்கிருந்த அவன் உள்ளத்தில், தோழி கூறிய அறிவுரைகள் ஆழப் பதிந்து பயனளித்து விட்டன. நோயின் ஆற்றலை ஒர் அளவு இயல்பாகவே எதிர்த்து அழிக்க வல்ல வன்மை வாய்ந்த உடலில், மருத்துவன் அளிக்கும் மருந்து விரைந்து பயன் அளிக்கத் தொடங்கு வதுபோல், அவள் கூறிய அறிவுரையும் நற்பயன் அளித்தது. பிரிந்து போகும் எண்ணத்தைக் கைவிட்டான் அவன். அவன் முடிவு கேட்டு மகிழ்ந்த தோழி அந்நற் செய்தியை, அவன் மனைவிக்கு, விரைந்து சென்றறிவித்து, "இனி வருந்திக் கிடப்பது விடுத்து, மகிழ்ந்து மாண்புறு வாயாக!' என வாழ்த்தினாள். இளவரசனின் மன மாற்றத்திற்குக் காரணமாய் அமைந்தது, தோழி கூறிய அறவுரையேயாகவும், அவள் அதை மறைத்து, "இதில் என் பங்கு பெரிதன்று. நான் ஓரளவு துணை புரிந்தேன் என்பது உண்மை. ஆனால், நானே இதை முடித்துவிட்டேன் என எண்ணேன். அவன் உள்ளமும் அந்த அளவில் பக்குவப்பட்டிருந்தது. அதனால், என் முயற்சியும் எளிதில் பயன் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/138&oldid=822141" இலிருந்து மீள்விக்கப்பட்டது