பக்கம்:பாலைச்செல்வி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 137 அதுவல்லது என்னால் எதுவும் ஆகிவிடவில்லை!" எனக் கூறித் தன் தொண்டின் ஆற்றலை மறைக்க முயலும் அத் தோழியின் பணிவுடைமை, அடக்கமுடைமை அனை வரும் அறிந்து மேற்கொள்ளத் தக்க அருமை வாய்ந்ததாம். "படைபண்ணிப் புனையவும், பாமாண்ட பயில்அணைப் புடைபெயர்ந்து ஒடுங்கவும், புறஞ்சேர உயிர்ப்பவும், உடையதை எவன்கொல் என்றுஊறுஅளந்து, அவர்வயின் நடைசெல்லாய், நனிஏங்கி நடுங்கல்! காண்நறுநுதால்! தொல்லெழில் தொலைபு இவள்துயர் உழப்பத், துறந்துநீ 5 வல்வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை, நீள்கதிர் அவிர்மதி நிறைவுபோல் நிலையாது நாளினும் நெகிழ்பு ஒடும் நலன் உடன் நிலையுமோ? ஆற்றல்நோய் அடஇவள் அணிவாட அகன்றுநீ, தோற்றம்சால் தொகுபொருள் முயறிமன்; முயல்வளவை 10 நாற்றஞ்சால் நளிபொய்கை அடைமுதிர் முகையிற்குக் கூற்றம்போல் குறைபடுஉம் வாழ்நாளும் நிலையுமோ? வகையெழில் வனப்பெஞ்ச வரைபோக வலித்துநீ பகையறு பயவினை முயறிமன்; முயல்வளவைத் தகைவண்டு புதிதுண்னத் தாதவிழ் தண்போதின் 15 முகைவாய்த்த தடம்போலும் இளமையும் நிலையுமோ? எனவாங்கு, பொருந்தியான் தான்வேட்ட பொருள்வயின் நினைந்தசொல் திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்துபோல் மருந்தாகி மனன் உவப்பப் 20 பெரும்பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/139&oldid=822142" இலிருந்து மீள்விக்கப்பட்டது