பக்கம்:பாலைச்செல்வி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இ. புலவர் கா. கோவிந்தன் தலைவன் நாடு காவல் குறித்துப் பிரியக் கருதினனாக, அஃதறிந்து வருந்திய தலைவியைக் கண்ட தோழி, தலைவனை அடுத்து, அவள் ஆற்றாமையும், இளமையது அருமையும் கூற, அது கேட்டு அவன் செலவினைக் கைவிட, அதைத் தோழி தலைவிக்கு உரைத்தது இது. 1. பண்ணி-புதியவாகப் பண்ணி; பாமாண்ட-பல்லாற்றாலும் சிறப்புடைய, 2. புடை-ஒருபால்; உயிர்த்தல்-பெருமூச்செறிதல், 3. உடையதை-உள்ளத்தில் கருதியதை ஊறு அளந்து-கேட்டின் அளவை அறிந்து, 4. நடைசெல்லாய்-அவள் கூறியவாறு ஒழுகாது; ஒடுங்கல்-நடுங்காதே; 5. தொல்லெழில்-இயற்கை அழகு; 6. வல்வினை-நாடு காவல்: வயக்குதல்-புகழ் பெறுதல்; வலித்திதுணிந்தாய், 7. அவிர்-ஒளிவீசும், 8. நாளினும்-நாள்தோறும்; நெகிழ்போடும்-நிலைகுலைந்து கெடும். 9. ஆற்றல் நோய்-கொடிய காமநோய்; அட-வருத்த; 10. தோற்றம் சால்தொரு பொருள்-புகழ் பெறும் பொருள்; 11. நளிபொய்கை-பெருமை பொருந்திய குளம், அடை முதிர்முகை-இலையினும் உயர்ந்த அரும்பு; 12. கூற்று-அழிவிற் காரணமாய அதன் மலர்ச்சி 13, எஞ்ச-குறைய 14. பயவினை-பயன்தரு தொழில்; 15. தகை-அழகு, 16. தடம்-குளம்; ஈண்டு அக்குளத்து நீர்; 21. மீளி-பாலைநிலத் தலைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/140&oldid=822144" இலிருந்து மீள்விக்கப்பட்டது