பக்கம்:பாலைச்செல்வி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 ஒன்றினார் வாழ்க்கை! செல்வ வாழ்வில் சிறக்க வாழ்ந்திருந்தனர், இளங் காதலர் இருவர். இயற்கை அவளுக்களித்துள்ள இணையிலா அழகைக் கண்டும், தொய்யிற் குழம்பால் அவள் மார்பிலும் தோளிலும் கரும்பு முதலாம் ஒவியம் பல வரைந்து, அவ்வியற்கை அழகிற்கு மேலும் அழகூட்டியும் மகிழ்ந்தான் அவன். தன் பேரெழில் கண்டு பாராட்டும் அவன் இன்சொல் கேட்டும், அருகில் அமர்ந்து தொய்யில் புனையும் இன்பக் காட்சியைக் கண்டும் மகிழ்ந்தாள் அவள். அவர்கள் வாழ்க்கைத் தோணி, இவ்வாறு, இன்பக் கடலில் எல்லை காணாது ஒடிக் கொண்டிருந்தது. ஒரு நாள், அவனுக்குப் பொருள்மீது ஆசை பிறந்தது. அவ்வாசையால், அப்பொருள் பெறுதற்கரியது என்பதை மறந்தான்; பொருள் புகழ் தரும்; போக நுகர்விற்குப் பெருந்துணையாம்; அறத்தை வளர்க்கும்; அன்பிற்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/141&oldid=822145" இலிருந்து மீள்விக்கப்பட்டது