பக்கம்:பாலைச்செல்வி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இ. புலவர் கா. கோவிந்தன் அது கேட்டும் பொருள் தேடிப் போவதை அவன் கைவிட்டானல்லன். அவன் முடிவறிந்து வருந்தினாள் அவளும். ஆயினும், அவன்பால் கொண்ட காதல், அந் நிலையிலும் குறைந்திலது. அவள் நெஞ்சம் அவனையே நினைந்து வருந்தலாயிற்று. தன் நெஞ்சம் அவன்பால் காட்டும், அப்பற்றினைக் கூறியாவது, அவனைத் தடுத்து நிறுத்த விரும்பினாள். அவ்வாறு விரும்பியவள், மீண்டும் அவனை நோக்கிக், "காதல! கானவன் வேட்டைக்குப் போவுழி, அவன் உடன் செல்லும் நாய், அவ்வேட்டையில் அகப்பட்ட மானைக் கொன்று, தனதாக்கிக் கொண்டு, தானே உண்ண வேண்டும் எனும் வேட்கையால், விரைந்து ஒடிக் கைப்பற்றுமேனும், அம்மான், அந்நாயை விரும்பாது, அக் கானவன்பாலே விரும்பிச் செல்வது போல, யான் எனக்குத் துணையாய், என்பாலே நிற்பாயாக என வலித்து நிறுத்தினும், என் நெஞ்சம் என்பால் நில்லாது உன்னிடமே ஓடி வருகிறது. என்னைப் புறக்கணித்துப் போகும் நீ, அவ்வாறு ஓடிவரும் என் நெஞ்சையாவது பேணிக் காப்பாற்றுவாயாக!” எனக் கூறி, அவனைப் பிரிந்து வாழ மாட்டாத தன் நிலையினை, அவனை மறந்து வாழாத தன் நெஞ்சின் நிலையினை எடுத்துக் காட்டி, வருந்தி வழி மறித்தாள். "இலங்குஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், புலங்கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும் விலங்குமலை வெம்பிய போக்கரு வெஞ்சுரம் தனியே இறப்ப யான்ஒழிந் திருத்தல், நகுதக்கன்றுஇவ் அழுங்கல் ஊர்க்கே; - இனியான் உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/174&oldid=822181" இலிருந்து மீள்விக்கப்பட்டது