பக்கம்:பாலைச்செல்வி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி : 17 யாழ்வரைத் தங்கியாங்குத் தாழ்புநின் தொல்கவின் தொலைதல் அஞ்சி, என் சொல்வரைத் தங்கினர் காதலோரே.” இல் வாழ்க்கையை அறநெறியில் நடத்துதற்கு இன்றியமையாது வேண்டும் பொருளினை ஈட்டிவருதற் பொருட்டுப் பிரியக் கருதிய தலைவனுக்குத் தலைமகளது இயல்புகூறிச் செல்லாது நிறுத்திய தோழி, அதைத் தலை மகளுக்குச் சொல்லியது இது. இதற்கு விதி-தொல்பொருள்: 41. 1. தொடங்கற்கண்-உலகம் தோன்றிய காலத்தில்; முதியவன்-முன்தோன்றிய நான்முகன், 2. அடங்காதார்-பகைவர்; மிடல்-வலி (ஆற்றல்). அடங்காதார் மிடல்சாய, முதியவன் முதலாக அமரர் வந்து இரத்தலின் என மாற்றிப் பொருள் கொள்க. 3. மடங்கல்-எமன்; எடுத்த வினையை இடையே விடாது முடித்தலின் அவனுக்கு அப்பெயர்; அவுனர்-அரக்கர்; 4. கடந்து அடுமுன்பு-எதிர்நின்று அழிக்கின்ற ஆற்றல்; மூஎயில்-இரும்பு, பொன், வெள்ளியாலாய மூன்று கோட்டைகள், 5. உடன்றக் கால்-சினந்து நோக்கிய பொழுது, ஒண்கதிர்- தீயைக் கக்கும் ஞாயிறு, தெறுதலின்-சுடுவதால், 6. கணிச்சியோன்-மழுவேந்திய சிவன், 7. ஏறுபெற்று-அழிந்து; வரை-மலை; 8. அழல் அவிர் ஆர்இடை-அழல் வீசும் செல்லுதற்கரிய வழி; 10, இறப்ப-பொருள் கருதிப் பிரிய; 11 இறந்து-கடந்து; இவளைப் பிரியாமையே பொருளாவதல்லது, பிரிந்து தேடும் பொருள், பொருளாகுமோ? ஆகாது எனக் கொள்க. 16. கல்-மலைநாடு; 13. புல்ஆகம்புல்லுதற்கு இனிய மார்பு, 20. கடன்-காடு சேர்ந்த நிலம்: 21. வடமீன்-அருந்ததி, வயங்கிய-பிறரால் போற்றுதற்குரிய, 22. தடமென்தோள்-பெரிய மெல்லிய தோள்; 24. புன்கண்-துன்பம், இணையவும்-வருந்தவும்; 26. காழ்வரை-குத்துக் கோலாரின் ஆணைக்கு; கடுங்களிற்று ஒருத்தல்-மதம் மிக்க யானைத் தலைவன். பாலை-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/19&oldid=822198" இலிருந்து மீள்விக்கப்பட்டது