பக்கம்:பாலைச்செல்வி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஒ 203 கூறுகின்றனையே, என்னே நின் பேதைமை!” என்று கூறி இவ்வாறு கூறியவள், சிறிது நாழிகை வாய்திறவாது இருந்து, மீண்டும் தொடங்கித், "தோழி ஒன்று. கூறுகின்றேன். அவர் என்பால் அருளுடையராயின், இவ்வாறு என்னை வருந்த விடுத்து வாராது இரார். என் வருத்த நிலையினை அறியாமையினாலேயே வந்திலர் என்பையேல், வேண்டுமாயின், என் நிலையை அறிவிக்கும் துதுவர் ஒருவரை அவர்பால் அனுப்பு. தூது கண்டாவது விரைந்து மீள்கின்றனரா எனக் காண்போம்!” எனக் கூறினாள். அப் பெண் அவ்வாறு கூறக் கேட்ட தோழி, அவளைப் பார்த்துப், "பெண்ணே அவர் பிரிந்தமையால் பெற்ற துயர்க் கொடுமையால், அறிவிழந்து என்ன காரியம் செய்யத் துரண்டுகின்றனை! அவர் நின்பால் அன்பிலா தார் போவும், நின்னை ஈங்கு வருந்த விடுத்து, அவர் மட்டும் ஆங்கு மகிழ்ந்திருப்பார் போலவும் கருது கின்றனையே! என்னே நின் பேதைமை ! பிரிவால் வருந்துவாள் நீ மட்டுமன்று. அவரும் நின் பிரிவால் வருந்தி வாடுவர். நின்னைப் பிரிந்து வாழ்தல் அவராலும் இயலாது. ஆகவே, அவர் விரைந்து வருவர். தூது அனுப்ப வேண்டுவதின்றியே வந்திவண் நிற்பர். வருந்தற்க!” என்று கூறித் தேற்றினாள். - 'பாடல்சால் சிறப்பின் சினையவும், சுனையவும் நாடினர் கொயல்வேண்டா நயந்துதாம் கொடுப்பபோல் தோடுஅவிழ் கமழ்கண்ணி தையுபு புனைவார்கண் தோடுஉறத் தாழ்ந்து துறைதுறை கவின்பெறச், செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணிகொள்பு 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/206&oldid=822216" இலிருந்து மீள்விக்கப்பட்டது