பக்கம்:பாலைச்செல்வி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 24? அம்மலர்களைச் சூழ்ந்து மொய்க்கும் வண்டுகள் எழுப்பும் இம் எனும் ஒலியைக் கேட்கிறேன். இளவேனிற் காலம் இது என உணர்ந்து உறுதுயர் அடைகிறது என் உள்ளம். யான் அதை மறைப்பினும், இன்ன காலத்தில், இன்னவாறு முயன்றால், இதை முடிக்கலாம் எனும் முறைமை அறியாத மன்னவனால், அவன் நாட்டு மக்கள், கொடுமை பல பெற்றுக் கேடடைதல் போல், பிரியாதிருந்து பேரின்பம் நுகர வேண்டிய பருவம் இது, பிரிந்து போய்ப் பொருள் ஈட்ட வேண்டிய பருவம் இது, எனும் செய்ம்முறை அறியா அவன் செயலால், என் கண்கள் கலங்குகின்றனவே, அதற்கு யான் என் செய்வேன்? தோழி! மரமும், செடியும், மலர்க்கோடியும் அரும்புகள் புரி நெகிழ, மலர்ந்து மணக்கும் காட்சியைக் காண்கிறேன். அம் மலர்த் தேனைக் குடிக்க வரும் வண்டுகள் எழுப்பும் யாழ் ஓசை போலும், இனிய ஓசையைக் கேட்கிறேன். இளவேனிற் காலம் இது என உணர்ந்து துயர் அடைகிறது என் உள்ளம். யான் அதை மறைப்பினும், செல்வர்க்கழகு தன் செழுங்கிளை தாங்குதல் எனும் செந்நெறி மறந்து, அவ்வுறவினர் அழுது வாடக் கண்டும் வாளா இருப்பவன் செல்வம், நாளடைவில் நலிந்து போவது ப்ோல், உடனிருந்து பேண வேண்டிய அவன், அது செய்யாது, வருந்த விடுத்துப் பிரிந்து சென்ற பிழையால், அவன் பெருஞ் செல்வமாய என் தோள்கள் தாமே மெலிந்தன. அதற்கு யான் என் செய்வேன்?' எனப் பலப்பல கூறி வருந்தினாள். அவ்வாறு வருந்தி உரைப்பாளுக்கு, விடையளித்து, அவள் துயர் போக்கும் வழியறியாது விழித்தாள் தோழி. அந்நிலையில், கண்களுக்கு வரும் நோயைக் கை சென்று பாலை-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/244&oldid=822258" இலிருந்து மீள்விக்கப்பட்டது