பக்கம்:பாலைச்செல்வி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 இ. புலவர் கா. கோவிந்தன் களைவதுபோல், பிரிந்து வாடும் அப்பெண்ணின் துயரும், அவள் துயர் போக்கும் வழி யறியாது வாடும் தோழியின் துயரும் ஒருங்கே கெடுமாறு, விரைந்தோடி வரவல்ல தன் குதிரையும் தானுமாய் அவண் வந்து சேர்ந்தான் அவன். அவன் வரவினை முதற்கண் அறிந்த தோழி, அப் பெண்ணிடம் விரைந்து சென்று, "தோழி! உள்ளத் துயரை ஊரார் உணர வருந்தும் வருத்தம், இனி நினக்கு இல்லை. நம் தலைவன் வரும் நாள் இது என எண்ணிக் கண்ட அந் நாளைத் தவற விடாது அவனும் வந்து சேர்ந்தான். வாடுக நின் வருத்தம்! வளர்க நின் வனப்பு!" எனக் கூறி வாழ்த்தி நின்றாள். - “மன்னுயிர் ஏமுற மலர்ஞாலம் புரiன்று, பன்னீரால் கால்புனல் பரந்து ஊட்டி இறந்தபின் சின்னிரால் அறல்வார, அகல்யாறு கவின்பெற முன்ஒன்று தமக்குஆற்றி, முயன்றவர் இறுதிக்கண் பின்ஒன்று பெயர்த்து ஆற்றும் பிடுடை யாளர்போல், 5 பன்மலர் சினைஉகச், சுரும்புஇமிர்ந்து வண்டுஆர்ப்ப, இன்னமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்; விரிகாஞ்சித் தாதாடி, இருங்குயில் விளிப்பவும் பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பென்மன், மறைப்பவும் கரிபொய்த்தான் கீழ்இருந்த மரம்போலக் கவின்வாடி 10 எரிபொத்தி என்நெஞ்சம் கடுமாயின், எவன்செய்கோ? பொறைதளர் கொம்பின்மேல் சிதர்இனம் இறைகொள நிறைதளரா தவர்தீமை மறைப்பென்மன், மறைப்பவும், முறைதளர்ந்த மன்னவன்கீழ்க் குடிபோலக் கலங்குபு பொறைதளர்பு பணிவாரும் கண்ணாயின், எவன்செய்கோ?15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/245&oldid=822259" இலிருந்து மீள்விக்கப்பட்டது