பக்கம்:பாலைச்செல்வி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 243 தளையவிழ்பூஞ் சினைச்சுரும்பு யாழ்போல இசைப்பவும், கொளைதளரா தவர்தீமை மறைப்பென்மன், மறைப்பவும் கிளைஅழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல்லென்று வளையானா நெகிழ்போடும் தோளாயின், எவன்செய்கோ! எனவாங்கு, 20 நின்நோய் நீஉரைத்து அலமரல்; எல்லா! நாம், எண்ணிய நாள்வரை இறவாது; காதலர் பண்ணிய மாவினர் புகுதந்தார் கண்ணுறு பூசல் கைகளைந்தாங்கே.” பருவங் கண்டு ஆற்றாது அழிந்த தலைவிக்குத் தோழி, அவன் வரவுணர்ந்து உவந்து கூறியது இது. 1. மன்உயிர் - நிலைபெற்ற உயிர்கள்; ஏம்.உற- வாழுமாறு: ஞாலம் - உலகம், புரவீன்று - ஒரு சொல், பாதுகாத்து என்பது பொருள்: 2. பன்னீர் - பலநீர், கால் - வாய்க்கால், இறந்தபின் - நீர்வற்றியபின், 3. சின்னிர் - சில நீர் அறல் - அருவி; வார - ஒழுகி ஒட 4. ஆற்றி - செய்து 5. பெயர்த்து ஆற்றும் - மீண்டு செய்யும், 6. இமிர்ந்து - ஒலித்து, 7. இறுத்தந்த வந்துதங்கிய 8. தாதுஆடி - மகரந்தத் தூள்களிற் படிந்து இருங்குயில் - கரிய குயில்; 10. கரி பொய்த்தான் - பொய்ச்சான்று கூறியவன்; 11. எரிபொத்தி - காமத்தீமூண்டு; 12. பொறைதளர் - மலர்ப்பாரம் தாங்காது தளரும்; சிதரின்ம் - வண்டுக்கூட்டம்; இறைகொள - தங்க; 13. நிறை தளராதவர் - நிறையெனும் குணத்தில் குன்றாதவர் 15. பணிவாரும் - நீர் ஒழுகும், 16. தளை - அரும்பின் முறுக்கு பூஞ்சினை - பூங்கொம்பு; சுரும்பு - வண்டு 17. கொளை - கொள்கை; ஒழுக்கம், 19. ஆனா - அமையாது; நெகிழ்பு - கழன்று; 21. அலமரல் - வருந்தற்க, எதிர்மறை வியங்கோள்; எல்லா ஏடி! எனும் பொருட்டு, 22. இறவாது - கடவாது 24. பூசல் - துன்பம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/246&oldid=822260" இலிருந்து மீள்விக்கப்பட்டது