பக்கம்:பாலைச்செல்வி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாய்மை வழுவாது வந்து சேர்ந்தார் பாண்டி நாடு, அப்பாண்டியர் வழிவந்த ஒரரசர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த காலம் அது. அவர் வழிவந்து, பறவைகள் போல் பறந்து பாய்ந்தோட வல்ல குதிரைகள் பூண்ட தேர்ப்படை முதலாம் நால்வகைப் படைத் துணையால் பேரரசு அமைத்து, பொதிய மலை யளிக்கும் பெரு வளத்தால், நாட்டு மக்களுக்கு நல்வாழ்வளித்து, வாய்மையில் வழுவாத் தன் ஆட்சி நலத்தால், நாட்டு மக்களை நன்னெறிக்கண் நிறுத்தி நாடாண்டிருந்தான் ஒரு வழுதி. அத்தகைய நல்லோன் நாடாண்டிருந்த காலத்தில், அரசனைப் போன்றே, அன்பும், அறனறியுள்ளமும் வாய்ந்த இளங் காதலர் இருவர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் அண்மையில் மணம் முடித்துக் கொண்டவராத லாலும், ஒருயிரும் ஈருடலுமாய் இணைந்து வாழும் ஒன்றிய அன்புடையராதலாலும், நாட்டின் நல்வாழ்வ், நாட்டு மக்களின் தளரா உழைப்பால் உண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/247&oldid=822261" இலிருந்து மீள்விக்கப்பட்டது